BREAKING: மகளிருக்கு மகிழ்ச்சி.. பட்ஜெட்டில் அறிவிப்பு

'வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்' என்ற பெயரில் புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பெண்கள் தங்கள் வீட்டிலேயே மாடித் தோட்டம் அமைக்க இடுபொருள் தொகுப்புகள், காய்கறி விதைத் தொகுப்புகள், பழச்செடி தொகுப்புகள் உள்ளிட்டவை வழங்கப்படும். இதற்காக ₹10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 'அனைத்தும் வீட்டிலே, ஆரோக்கியம் கையிலே' என்ற கேப்ஷனுடன் இந்த திட்டம் அறிமுகமாகியுள்ளது.