கூட்டுறவு கடன் முழுமையாக ரத்து... புதிய தேர்தல் அறிவிப்பு

மத்திய, மாநில அரசு வேலைகளில் இல்லாத குடும்பத்தினரின் குழந்தைகளின் மருத்துவம் பொறியியல் உள்பட அனைத்து கல்விச் செலவையும் அரசே ஏற்கும் என்று விஜய் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். 5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு கடன் முழுமையாக ரத்து, 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் 50% கடன் தள்ளுபடி செய்வது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.