
2021 தேர்தலை விட 2026 தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார். நெல்லையில் பேசிய அவர், திமுகவின் கூட்டணிக்கு ராமதாஸ் தலைமையிலான பாமக வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். அனைத்து தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அண்மையில் GK மணி பேசிய நிலையில், திமுக அணியில் அங்கம் வகிக்கும் வேல்முருகன் இந்த புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார்.