BREAKING: நாடு முழுவதும் முடங்கியது.. கடும் அவதி

கடந்த அரைமணி நேரமாக இந்தியா முழுவதும் X தளம் முடங்கியுள்ளது. சர்வர் கோளாறு, நெட்வொர்க் பிரச்னை காரணமாக X தளம் முடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், உண்மையான காரணம் குறித்து X நிர்வாகம் இதுவரை அறிவிக்கவில்லை. X தளத்தின் சேவை முடங்கியதால் லட்சக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் X சேவைகள் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.