
ஊதிய உயர்வு, சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள், சத்துணவு & தூய்மைப் பணியாளர்கள் உள்பட பலதரப்பினரும் போராடி வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் அரசு சொல்லும் பதில் நிதி இல்லை என்பதே. இந்நிலையில், 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை ₹3,000, கோடைக்கால சிறப்பு நிதி ₹2,000 சேர்த்து<<19126380>> ₹5,000-ஐ வழங்கியுள்ளது<<>> தமிழக அரசு. கடும் நிதி நெருக்கடியில் தேர்தலை முன்வைத்து அரசு இதை வழங்குகிறதா எனக் கேள்வி எழுந்துள்ளது.