
தமிழ்நாட்டில் தனித்து தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் காங்கிரஸ் கட்சி இல்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். மேலும், காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும்போது சிறுபான்மையினர் பாதுகாப்பாக உணர்கிறார்கள்; திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்., ஒரு மதச்சார்பற்ற தோற்றத்தை அளிக்கிறது என தனியார் டிவி நிகழ்ச்சியில் கூறிய அவர், பின்புற வாசல் வழியாக அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளதாகவும் விமர்சித்தார்.