பொறையார்: தேர்தல் பறக்கும் படை குழுவினர் தீவிர சோதனை

பூம்புகார் சட்டமன்ற தொகுதி, தரங்கை பேரூராட்சி பொறையார் பேருந்து நிலையம் அருகே நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து, இன்று தேர்தல் பறக்கும்படை குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். ரூ.50 ஆயிரம் மேல் உரிய ஆவணம் இல்லாமல் பணம், நகை எடுத்துசென்றால் பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.