
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 589 கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினமான 26.01.2026 அன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று, கிராம வளர்ச்சி திட்டங்கள் குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.