தலைமை ஆசிரியருக்கு விருது

மயிலாடுதுறை மாவட்டத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மாங்கணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு அந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய கு.விஜயகுமார் மற்றும் அப்பள்ளியின் தன்னார்வலர் ஜெனிஷா ஆகிய 2வருக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நேற்று சென்னையில் விருது வழங்கினார்.